செய்வேன், அன்பே - ஓர் அகராதி!

நீ பேசும்வார்த்தைகள் சேகரித்து,
செய்வேன், அன்பே - ஓர் அகராதி!
நீ தூங்கும்நேரத்தில் தூங்காமல்,
பார்ப்பேன், தினம் - உன் தலைக்கோதி!

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

ஊமையாய் நானும் மாறினேன்..

மெய்யெழுத்தும் மறந்தேன்!
உயிரெழுத்தும் மறந்தேன்!
ஊமையாய் நானும் மாறினேன்..
கையைச்சுடும் என்றாலும்,
தீயைத்தொடும் பிள்ளைப்போல்,,
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

பேரன்பேத்தி கொள்ளும்வயசுல

ரெண்டுபேரும் மெத்தையிட்டு அடி எத்தனை நாளாச்சு,
பேரன்பேத்தி கொள்ளும்வயசுல என்னது வீண்பேச்சு..
உயிர் இருக்கும் வரை இருக்கும் - இது காமன்சொன்ன சொல்லாச்சு..

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்!

வார்த்தை என்னை கைவிடும் போது, மெளனம் பேசுகிறேன்..
என் கண்ணீர் வீசுகிறேன்..
எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்! உனக்கேன் புரியவில்லை..?

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,

கற்பு என்பது பிற்போக்கு இல்ல,
கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்!
காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,
கனகபூக்கள் அணிஞ்சிக்கணும்!

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே!

வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே!
வாழாத பேர்க்கும் சேர்த்து, வாழ்வோமே தோழியே!
வானும் மண்ணும், பாடல் சொல்லும், நம்பேரிலே...

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!

உயிரைத் திருகி, உந்தன் கூந்தல் சூடிக் கொள்ளாதே!
என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!
விண்மீன் பறிக்க வழியில்லையென்று கண்களை பறிக்காதே!
என் இரவை எரித்து குழைத்துக் குழைத்து கண்மை பூசாதே!


பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே!

புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே!
விரலிலும், குரலிலும், ஸ்வரங்களின் நாட்டியம்,
அமைத்தேன்.. நான்!

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா,

அட வெள்ளை வெள்ளையாய் ஓர் இரவு வேண்டுமா,
புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா,
உனைக் காலைமாலையும் சுற்றிவருவது காதல்செய்யவே,

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

மடல்வாழை அழைத்தால், மழைச்சாரல் திரும்பும்..

மயில்தோகை அழைத்தால்,
மழைமேகம் நெருங்கும்..
மடல்வாழை அழைத்தால்,
மழைச்சாரல் திரும்பும்..

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

காலச் சுத்தும் நெழலைப் போல,

கல்லுக்குள்ள தேரை போல,
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா..?
காலச் சுத்தும் நெழலைப் போல,
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா..?

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

வானம் உங்கள் கைகளில் உண்டு!

வானம் உங்கள் கைகளில் உண்டு!
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு!
நான் என்று எண்ணாமல், நாம் என்று உறவு கொள்ளணும்!

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்;

அணைத்து நனைந்தது தலையணைதான்,
அடுத்த அடியென்ன எடுப்பது நான்;
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்,
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்;

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது,
மறைவதும் பின்பு உதிப்பதும் மர‌பானது..
கடல்களில் உருவாகும் அலையானது,
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது..
நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..
விளக்குகள் காட்டும், வெளிச்சத்தின் எல்லை..
ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான், இறைவன்...

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

அவன் அருள் மழையினில்..

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்...
அவன் விழியசைவினில் கலைகளும் மலர்ந்திடும்...
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்...
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட...

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

வரி-சை - அறிமுகம்

வணக்கம்,
நான் கொஞ்ச நாள் முன்னால, G-Talkல status message-ஆ நான் கேட்டுகிட்டிருக்கிற/கேட்ட பாடல் வரிகள்-ல பிடிச்ச சில வரிகள் போட்டுக்கிட்டிருந்தேன்.. அப்போ, தெரிஞ்சவங்க கிட்ட, அந்த வரிகள், எந்த பாட்டு?, என்ன படம்? - னு ஒரு போட்டியா உருவாச்சு.. அப்புறம் கொஞ்ச நாள் அப்படி போடறத விட்டுட்டேன்.
திரும்ப போடலாம்னு நினைச்சப்ப - தினம், வரிகள் போட்டு, அதோட, விவரங்களும் போட்டு, ஒரு பதிவு எழுதலாம்-னு தோணுச்சு, அந்த முயற்சி தான் இது...
இனி ஒரே 'வரி'சைதாங்க...
முடிந்த வரை, தெரிந்த வரை, சரியா இருக்கணும்னு நினைக்கறேன்.. தவறிருந்தா திருத்துங்க..
நன்றி,
தணிகா

புதுப்பிப்பு: வரிகள் மட்டும் 'வரி'சையில் வரும், முழுவரிகள் மட்டும் விவரங்கள் - முழுவரிசை-யில் வரும். நன்றி.
முழுவரிசை - வணக்கம்

பி.கு.,
பாடல்வரிகள் உரிமைகள் பாடலாசிரியரைச் சேரும்.